தளபதி விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த்.. இறுதி அஞ்சலி செலுத்து வருவாரா
கேப்டன் விஜயகாந்த் - தளபதி விஜய்
சினிமாவில் இன்று பெரிய நட்சத்திரங்களாக இருக்கும் பலருக்கும் உதவி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அப்படி விஜயகாந்தால் முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.
இவர் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் முன்னணி இடத்திற்கு வர முயற்சி செய்துகொண்டு இருந்தபோது, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த்
அப்போது த்ன் மகனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு தேவைப்படுகிறது என்றும் நீங்கள் அதை ஆரம்பித்து வைத்தால், என் மகனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறி செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்துடன் இணைந்து தனது மகன் விஜய்யை நடிக்க வைத்துள்ளார்.
அப்படத்தின் மூலம் விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய்யின் இன்றை மாபெரும் வளர்ச்சிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் இன்று நம் அனைவரையும் விட்டு புரிந்துள்ளார்.
இவருடைய மரணம் தமிழக மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கண்டிப்பாக விஜய் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.