சிகிச்சை முடிந்து விஜய் ஆண்டனி போட்ட பதிவு..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
விஜய் ஆண்டனி
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு துறையிலும் அசத்தியவர் தான் விஜய் ஆண்டனி. தற்போது அவர் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் லங்காவி தீவில் நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.
இவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை மலேசியாவில் கொடுக்க பட்டது. இதன் பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நலம் குறித்து ட்வீட்
சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அவரின் உடல் நலம் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில், " அன்பு இதயங்களே, நான் 90 % சதவிதம் குணம் அடைந்து விட்டேன். உடைந்த தாடை மற்றும் முக்கு தற்போது ஒன்று சேர்ந்து விட்டது.
என்னவென்று தெரியவில்லை நான் முன்பைவிட தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்கு காரணம் நீங்கள் தான் இன்று முதல் பிச்சைக்காரன் படத்தின் வேலையை தொடங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
அன்பு இதயங்களே
— vijayantony (@vijayantony) February 2, 2023
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்?
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்?
அன்புக்கு நன்றி
90களில் கலக்கிய நடிகை சங்கவியின் மகளா இவர்?- அழகாக உள்ளாரே, கியூட் வீடியோ

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
