அவனையும் ரயில்ல தள்ளி விட்டு தண்டனை கொடுங்க: கொந்தளித்த நடிகர் விஜய் ஆண்டனி
சத்யா கொலை பற்றி நடிகர் விஜய் ஆன் டனி கடும் கோபத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
சத்யா கொலை
கல்லூரி மாணவி சத்யாவை சென்னை St.தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி கொலை செய்த சதிஷ் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் மூன்று நாட்களாக திட்டமிட்டு ரயில் வருவதை நோட்டமிட்டு செய்த கொலை இது என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் சத்யாவின் அப்பா மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொந்தளித்த நடிகர் விஜய் ஆண்டனி
சதீஷை ரயில் முன் தள்ளி தண்டனை கொடுங்க என நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
"சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என விஜய் ஆண்டனி குறிப்பிட்டு இருக்கிறார்.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்? pic.twitter.com/b8h5CPb4hg
— vijayantony (@vijayantony) October 14, 2022
அப்பாவாகிறார் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. கர்ப்பமாக இருக்கும் அவருடைய மனைவியின் புகைப்படம்