நடிகர் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
விஜய் ஆண்டனி
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.
சின்னத்திரையில் இசையமைப்பாளராக வலம் வந்த இவருக்கு சுக்ரன் திரைப்படம் முதல் வெள்ளித்திரையில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து டிஷ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் என தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி 2012ல் வெளிவந்து நான் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் போன்ற படம் வெற்றியடைந்தது. அதில் குறிப்பாக பிரச்சைக்காரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
இவர் நடிப்பில் கடைசியாக ரோமியோ திரைப்படம் வெளிவந்திருந்த நிலையில், இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மழை பிடிக்காத மனிதன் படம் வெளிவந்துள்ளது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 55 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
