பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் விஜய் ஆண்டனி சொத்து மதிப்பு.. அடேங்கப்பா! இவ்வளவா?
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின், சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக இவர் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார்.
இவ்வளவா?
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் ஆண்டனி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, விஜய் ஆண்டனிக்கு சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும், பெங்களூரில் ரூ. 3 கோடியில் ஒரு வீடும் உள்ளது.
அது போல பிஎம்டபில்யூ போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ள விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ. 55 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.