அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன்

By Yathrika Oct 16, 2024 08:00 AM GMT
Report

விஜய் ஆண்டனி

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் ”ககன மார்கன்”.

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். குறிப்பாக, இவர் 2013ம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் | Vijay Antony New Movie Announcement

அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ககன மார்கன்” ஒரு Murder Mystery-Crime Thriller திரைப்படமாகும். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள் வழக்கமான mystery-crime thriller ஆக இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான visual effects அம்சங்களுடன், ககன மார்கன் விறுவிறுப்பான detective story ஆக இருக்கும்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் | Vijay Antony New Movie Announcement

Underwater Sequences இந்த படத்தில் முக்கிய அம்சம் வகிப்பதால், படத்தின் பல முக்கிய காட்சிகள் பல நாட்களாக மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த படத்தில் பிரம்மிக்கத்தக்க VFX இடம் பெறுகின்றன.

ககன மார்கன் குடும்பமாக வந்து பார்த்து மகிழக் கூடிய படமாக இருக்கும். விஜய் ஆண்டனி அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள் மற்றும் தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.மிகவும் வித்தியாசமான இந்த ககன மார்கன் வெளியீட்டிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US