கமல்ஹாசனை போய் பார்த்தீங்க.. இளையராஜாவை ஏன் பாக்கல? மஞ்சுமெல் பாய்ஸ் சர்ச்சை பற்றி பேசிய நடிகர்
இளையராஜா தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு என்ற பாடலை தனது அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்கு இழப்பீடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார். அந்த பாடலுக்கு உரிமை வைத்திருக்கும் மியூசிக் லேபிள் நிறுவனத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாக அந்த பட தயாரிப்பாளர் பதிலடி கொடுத்து இருந்தார்.
விஜய் ஆண்டனி கருத்து
இந்த சர்ச்சை பற்றி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். "தனக்கு உரிமை இருப்பதால் தான் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அவரே ஒரு மியூசிக் லேபிள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்."
"மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஹிட் ஆன பிறகு கமல்ஹாசனை சந்தித்து பேசினீர்கள். அதே போல இளையராஜாவையும் சந்தித்து பேசி இருக்கலாம்" என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.
தன்னை சந்திக்க வராததால் தான் இளையராஜா இப்படி செய்கிறாரோ என்பது போல விஜய் ஆண்டனி கருத்து இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
