மாஸ் வெற்றியடைந்த பிச்சைக்காரன் 3ம் பாகம் On The Way... இயக்குனர் இவரா?

By Yathrika Nov 10, 2026 05:40 AM GMT
Report

Pichaikkaran: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி இப்போது பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் நூறு சாமி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது, வசூலிலும் கலக்கியது. அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் அப்பா குட்டி என்ற படம் உருவாகியுள்ளது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

முதல் பாகம்

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியையும், பெயரையும் பெற்றுத்தந்த திரைப்படம் பிச்சைக்காரன். கடந்த 2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான செண்டிமெண்ட்களை உடைத்தெறிந்து வெற்றி கண்டிருந்தது.

மாஸ் வெற்றியடைந்த பிச்சைக்காரன் 3ம் பாகம் On The Way... இயக்குனர் இவரா? | Vijay Antony Pichaikkaran 3 On Cards

சசி அவர்களின் இயக்கம், விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் திரைக்கதை போன்றவற்றால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். தமிழில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பிச்சைக்காரன் படம் தெலுங்கிலும் வெளியாகி மாஸ் வெற்றிக் கண்டது.

இரண்டாம் பாகம்

கடந்த 2023ம் ஆண்டு பிச்சைக்காரன் 2ம் பாகம் வெளியானது. இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடிக்க, அவரது மனைவி தயாரித்திருந்தார். முதல் பாகம் அளவில் இல்லையென்றாலும் இரண்டாம் பாகமும் வெற்றிக் கண்டது.

மாஸ் வெற்றியடைந்த பிச்சைக்காரன் 3ம் பாகம் On The Way... இயக்குனர் இவரா? | Vijay Antony Pichaikkaran 3 On Cards

3ம் பாகம்

முதல் இரண்டு பாகங்கள் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகம் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த மூன்றாம் பாகத்தை மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் தான் இயக்க உள்ளாராம்.

மாஸ் வெற்றியடைந்த பிச்சைக்காரன் 3ம் பாகம் On The Way... இயக்குனர் இவரா? | Vijay Antony Pichaikkaran 3 On Cards

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் இந்த 3ம் பாகத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். படத்தை அடுத்த வருடம் 2027 ஆயுத பூஜை ஸ்பெஷலாக படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US