10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த பிச்சைக்காரன் கூட்டணி.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா
பிரச்சைகாரன்
2016ம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்தார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் தீபா ராமானுஜம், Satna Titus, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி எடுத்தார். இப்படத்தை சசி இயக்கவில்லை, விஜய் ஆண்டனி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நூறுசாமி
இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து மீண்டுன் சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ளனர். இப்படத்திற்கு நூறுசாமி என தலைப்பு வைக்கப்படுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி ரிலீஸ் என்றும் அறிவித்துள்ளனர்.
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா ❤️#NooruSaami pic.twitter.com/KO8QDpmN8d
— vijayantony (@vijayantony) September 10, 2025