நானும் இறந்துவிட்டேன்.. விஜய் ஆண்டனி மகள் பற்றி உருக்கமான பதிவு
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பள்ளி 12ம் வகுப்பு படித்து வந்த மீரா ஒரு வருடமாக மன அழுத்தத்தில் இருந்தார், அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.
நானும் இறந்துவிட்டேன்..
இந்நிலையில் மகள் பற்றி விஜய் ஆண்டனி உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவியா சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்."
"என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இருந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொங்கி வைப்பாள்."