வடக்கன்ஸ் கூட இப்படிபட்டவர்கள் தான்.. விஜய் ஆண்டனியின் ட்விட் வைரல்

By Parthiban.A Feb 12, 2023 01:30 PM GMT
Report

வடக்கன்

தமிழ்நாட்டில் சமீப காலமாக வட இந்தியாவில் இருந்து அதிகம் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதால் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கி விவசாய வேலை வரை அனைத்திலும் அவர்கள் இருக்கின்றனர்.

இது பற்றி சமூக வலைத்தளங்களில் அவரகளை வடக்கன்ஸ் என சொல்லி விமர்சிக்கின்றனர். அவர்களை ட்ரோல் செய்து கோபி சுதாகர் யூடியூபில் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரல் ஆனது.

வடக்கன்ஸ் கூட இப்படிபட்டவர்கள் தான்.. விஜய் ஆண்டனியின் ட்விட் வைரல் | Vijay Antony Tweet On North Indians

விஜய் ஆண்டனியின் ட்வீட்

இந்நிலையில் இந்த விஷயம் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட் செய்து இருக்கிறார்.

"வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என ட்விட் செய்து இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US