கொரோனா ட்விட்.. விஜய் ஆண்டனிக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு!
விஜய் ஆண்டனி தற்போது கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். இசையமைப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய அவர் வித்யாசமாக கதையை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா பற்றி விஜய் ஆண்டனி போட்டிருக்கும் ட்விட் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
"கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்! வாழ்க வளமுடன்" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அவர் சாதாரண மக்களின் பொருளாதார பிரச்சனை பற்றி பேசி இருந்தாலும், இப்படி பாம் போட்டு அழிக்க வேண்டும் என யோசிக்கிறாரே என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
கொரோனா?பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
— vijayantony (@vijayantony) January 10, 2022
எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்?
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி,
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்?
வாழ்க வளமுடன்