தலைவர் நல்லா இருக்காரா? ரஜினியை அக்கறையாக விசாரித்த தளபதி விஜய், ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
விஜய் - ரஜினி
சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக திட்டு தீர்த்து வருகிறார்கள்.
இந்த சண்டை எப்போது தான் முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை. இந்நிலையில், ரசிகர்கள் இப்படி இருக்க, நடிகர் விஜய் செய்த விஷயம் படுவைராகி வருகிறது. இதுகுறித்து கலை இயக்குனரும், நடிகருமான கிரண் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்
"ஜெயிலர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த அதே இடத்தில் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பும் நடந்துகொண்டிருந்தது. அப்போது நான் அவரை பார்க்க சென்று இருந்தேன். அவர் என்ன பார்த்ததும் முதலில் நலம் விசாரித்தார். பின் ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து பேசினார். அதன்பின், தலைவர் எப்படி இருக்காருனு ரஜினி சார் குறித்து அக்கறையாக கேட்டார். ஏனென்றால் அவர் அப்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தார். விஜய் சார் கூட ரஜினி சாரை தலைவர் என்று தான் கூப்புடுகிறார்.

மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளில் இயக்குனர் நெல்சனுக்கு காலையில் போன் கால் செய்து எழுப்பி விட்டதே விஜய் சார் தான். சீக்கிரம் போ என நெல்சனிடம் விஜய் சார் கூறியதாக" பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். விஜய் - ரஜினி ரசிகர்கள் இடையே கடும் மோதல் இருந்தாலும், விஜய் எப்போதுமே ரஜினியை உச்ச இடத்தில் வைத்து தான் பார்க்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம் என கூறி வருகிறார்கள்.
ஸ்பெஷல் தினத்தில் தனது மகனின் சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்- குவியும் லைக்ஸ்
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri