படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய்.. விமானநிலையத்தில் இருந்து வெளியான வீடியோ
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வர, சன் பிச்சர்ஸ் தயாரித்து வருகிறது.
முதல் முறையாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்கள்.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்றது.
இதற்காக நடிகர் விஜய்யும் டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் நடிகர் விஜய்.
மேலும் இன்னும் சில நாட்களில் பீஸ்ட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு, ரஷ்யாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thalapathy Returning to Chennai after the Delhi Schedule✈️ Mrng Dharisanam ??#Beast @actorvijay #Master pic.twitter.com/dwj0hNoo5E
— Arun Vijay (@AVinthehousee) September 24, 2021