மீண்டும் இணையும் விஜய்-அட்லீ கூட்டணி! முக்கிய இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவு
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணி தமிழ் அதிக வெற்றி படங்களை கொடுத்த கூட்டணியாக உள்ளது.
இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருந்தது, மேலும் இந்த மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
இப்போது விஜய் தளபதி 65 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், அட்லீ அடுத்ததாக நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்றுடன் தெறி திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் அட்லீ அப்படத்தில் பணியாற்றிய அனைவரும் நன்றி தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
அதனை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் தமன் தெறி தனக்கு பிடித்த விஜய் அண்ணா படம், அடுத்தப்படத்திற்காக காத்திருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு அட்லீ "விரைவில் ப்ரோ" என கூறியுள்ளார், இதனால் தற்போது ரசிகர்கள் மீண்டும் இந்த கூட்டணிக்காக காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan