2001ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவருடைய திரையுலக மார்க்கெட் தற்போது ரூ. 300 கோடிக்கும் மேலாக உள்ளது. மேலும், தற்போது இவர் நடிக்கும் படங்களுக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் தான் சம்பளம் வாங்கி வருகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தின் First லுக் சமீபத்தில் வெளிவந்து சில கிண்டல்களை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று பத்ரி. பி.ஏ.அருண் பிரசாத் இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்து வெளியானது. விவேக், பூமிகா, கிட்டி, மோனல், ரியாஸ் கான் என பலரும் நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பத்ரி படத்தின் மொத்த வசூல்
இந்நிலையில், இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்த இப்படம், 2001ஆம் ஆண்டு ரூ. 12 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.