விஜய்யின் பீஸ்ட் பட போஸ்டர்களில் இப்படி ஒரு சீக்ரெட் உள்ளதா?- இதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?
இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கான படப்பிடிப்பு வெளிநாடு மற்றும் சென்னையில் செட் போடப்பட்டு மாற்றி மாற்றி நடக்கிறது.
இதுவரை படத்தின் 2 போஸ்டர்கள், ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களே ரசிகர்கள் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அடுத்து என்ன அப்டேட் வரும் என்பது தெரியவில்லை, ஆனால் நியூஇயர், பொங்கல் வருகிறது, கண்டிப்பாக இந்த இரு ஸ்பெஷல் தினங்களில் பீஸ்ட் படத்தின் ஏதாவது சில விஷயம் வெளியாகும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் தான் பீஸ்ட் பட புகைப்படங்கள் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது இதுவரை வெளிவந்த பீஸ்ட் போஸ்டர்களில் விஜய் முகம் வலது பக்கம் இருப்பது போல் மட்டுமே உள்ளது.
எல்லா புகைப்படங்களிலும் அவரது இடது பக்கம் காட்டப்படவில்லை. எனவே அதில் என்ன சீக்ரெட் இருக்கிறது, இல்லை சாதாரணமாக தான் புகைப்படங்கள் அமைந்ததா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan