விஜய்யின் பீஸ்ட் படம் முன்பதிவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?- அதுவும் தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகப்போகும் படம் பீஸ்ட். விஜய்யின் இந்த 65வது படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
படத்தின் புரொமோஷன்
சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் அப்டேட்டுகள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
ஃபஸ்ட் லுக், அடுத்து பாடல் டீஸர்கள், டிரைலர், இப்போது 10 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் பேட்டி என படத்தை பற்றி மக்கள் பேசும் அளவிற்கு ஏதாவது ஒரு விஷயத்தை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
ரிலீஸ் ஆக 10 நாட்களே உள்ள நிலையில் புக்கிங் எல்லாம் வேறு லெவலில் நடக்கிறது.
இப்போது நமக்கு வந்துள்ள தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்திற்கான நடந்த முன்பதிவில் மட்டும் படம் ரூ. 2.4 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த பட வேலையில் விஜய்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய் தனது 66வது படத்தை வம்சி என்பவருக்கு இயக்க வாய்ப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது. விஜய்யின் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க ரஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.
நேற்று படத்தின் பூஜை போடப்பட்டு அதன் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணைகிறார்களா?- இப்படிபட்ட ஒரு படமா?