விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இத்தனை கோடிக்கு பிரபல OTT நிறுவனம் வாங்கியுள்ளதா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வருகிறது பீஸ்ட் திரைப்படம்.
இந்த கூட்டணி அமைய இருக்கிறது என்ற அறிவிப்பையே படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் படு பிரம்மாண்டமாக அறிவித்தார்கள். அதற்கு அடுத்தடுத்து அவர்கள் வெளியிடும் அறிவிப்புகளும் படு மாஸாக இருக்கின்றன.
அண்மையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார் என்று வந்த தகவல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தற்போது இன்னும் படப்பிடிப்பில் இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை பிரபல OTT தளமான நெட்ப்ளிக்ஸ் பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் திரையரங்கில் படம் வெளியாகாதா என வருத்தப்பட, திரையரங்கில் தான் படம் முதலில் வெளியாகும் என படக்குழுவினர் நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.