விஜய்யின் பீஸ்ட் படத்தின் 2ம் பாகம் தயாராகிறதா?- இயக்குனர் கொடுத்த அப்டேட்
தமிழில் பெரிய அளவில் தயாராகி பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் படம் விஜய்யின் பீஸ்ட். படம் ரிலீஸ் ஆன நாள் முதலில் இருந்து விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தளபதியின் பஞ்ச் வசனங்கள், காமெடி, நடனம், ஆக்ஷன் என ஒவ்வொன்றையும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
படத்தின் வசூல்
படம் 5 நாள் முடிவில் சென்னையில் ரூ. 7 கோடிக்கு மேலாகவும், தமிழகத்தில் ரூ. 85 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் குறைந்தாலும் குறையலாம் என்று கூறப்படுகிறது.

நெல்சன் கொடுத்த அப்டேட்.
படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் பற்றி அனைவரும் பேச பீஸ்ட் 2ம் பாகம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அது என்னவென்றால் இயக்குனர் நெல்சன் ஒரு பேட்டியில், பீஸ்ட் 2ம் பாகம் இயக்க வாய்ப்பு கிடைத்தால், விஜய் அவர்கள் மீண்டும் வீர ராகவனாக நடிக்க ஒப்புக் கொணடால் பீஸ்ட் 2ம் பாகம் வரும் என கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்துவது பீஸ்ட்டா, KGF 2வா?- இரண்டு படங்களின் முழு வசூல்