தமிழ்நாட்டில் இத்தனை திரையரங்குகளில் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகிறதா?
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷன் வேலைகள் எல்லாம் படு வேகமாக நடக்கிறது, தற்போது தொலைக்காட்சிகளில் டீஸர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த டீஸரின் புகைப்படங்களை ரசிகர்கள் இப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றனர்.
புக்கிங் விவரங்கள்
தமிழ்நாட்டில் எவ்வளவு கிரேஸ் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு இருக்கிறதோ அதே அளவு வெளிநாட்டிலும் உள்ளது. முன்பதிவிலேயே படம் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறது.
தமிழ்நாட்டில் முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிவிடுகிறது.
தமிழ்நாட்டில் திரையரங்குகள்
தமிழ்நாட்டில் விஜய்யின் படங்கள் எப்போதும் பெரிய அளவில் ரிலீஸ் ஆகும், திரையரங்குகளும் அதிக அளவில் புக் ஆகும். அப்படி பீஸ்ட் படம் தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.
இது நிஜமாகவே பெரிய அளவு என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. எல்லோரையும் அழவிட்ட பிக் பாஸ்!