புக்கிங்கில் மாஸ் சாதனை செய்த விஜய்யின் பீஸ்ட்- இதற்குள் இத்தனை கோடி வசூலா?
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது. படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
முதல் ஷோ முடிவில் படத்திற்க நல்ல விமர்சனம் தான் வந்துள்ளது, ஆனால் போக போக விமர்சனங்கள் வேறு மாதிரியும் வரலாம்.
விஜய்யின் இந்த 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளார்கள், எனவே படத்திற்கு அவர்கள் புரொமோஷன் பெரிய அளவில் செய்தார்கள்.
படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு எகிற டிக்கெட் புக்கிங்கும் பெரிய அளவில் இருந்தது.
தமிழகத்தில் ரோஹினி சினிமாஸில் மட்டுமே ரூ. 1 கோடி வரை டிக்கெட் புக்கிங் வசூல் என்றனர்.
இப்போது கர்நாடகாவில் டிக்கெட் புக்கிங்கில் மட்டும் ரூ. 4 கோடியை தாண்டிவிட்டதாம் பீஸ்ட், மலேசியாவில் கூட ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.