முக்கிய இடத்தில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்த விஜய்யின் பீஸ்ட்- புதிய சாதனை
விஜய்யின் பீஸ்ட் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு படம். கதை என்ன என்பது ஓரளவிற்கு நமக்கே டிரைலரை பார்த்த போது தெரிந்துவிட்டது.
படம் முழுவதும் விஜய்யின் மாஸ் இருக்கப்போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
புக்கிங் விவரங்கள்
விஜய்யின் படம் வருகிறது என்று தகவல் வந்ததில் இருந்து புக்கிங் செய்ய தான் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளிநாட்டில் படத்திற்கான புக்கிங் முன்பதிவிலேயே ரூ. 90 லட்சத்தை தாண்டி வசூலித்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் புக்கிங் திறந்த உடனேயே அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிடுகிறதாம்.

கேரளா முன்பதிவில் சாதனை
கேரளா விஜய்யின் இன்னொரு கோட்டை என்றே கூறலாம். அங்கு பீஸ்ட் பட முன்பதிவில் ஒரு சாதனை நடந்துள்ளது. அதாவது அங்கு உள்ள ஒரு மல்டிப்ளக்ஸில் 41 ஷோக்கள் திரையிடப்பட இருக்கிறதாம், அது முழுவதும் பீஸ்ட் டிக்கெட் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம்.
அங்கு இத்தனை ஷோக்கள் ஒளிபரப்பாவது இதுதான் முதல்முறையாம், ரஜினியின் 2.0 படத்திற்கு கூட இவ்வளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலையில் முடி இல்லாமல் நிக்கி கல்ராணி சகோதரி! போட்டோவால் அனைவரும் ஷாக்