சுயநினைவை இழந்த நாசர் மகன்.. விஜய்யால் நடந்த அதிசயம்!! நிஜமாவே வேற லெவல்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் விஜய். இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அதில் சிலர் விஜய்யின் தீவிரமான ரசிகர்களாக உலா வருகின்றனர்.
இதில், தெரிந்தோ, தெரியாமலோ விஜய் மூலம் சிலர் பலன் அடைந்துள்ளனர். அந்த வகையில், பேட்டி ஒன்றில் நாசர் அவரது மகன் கோமாவில் இருந்து வெளிவந்ததற்கு விஜய் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
வேற லெவல்
அதில், " என் மூத்த மகன் விஜய்யின் தீவிரமான ரசிகன். ஒருமுறை என் மகனுக்கு விபத்து ஏற்பட்டு, 14 நாட்கள் சுயநினைவை இழந்துவிட்டார். அப்போது அவன் முதலில் அம்மா, அப்பா என்று கூறவில்லை அவன் கூறிய வார்த்தை விஜய் தான்.
அதனால் அவனுக்கு விஜய் படங்கள், விஜய் பாடல்கள், விஜய் பேசிய பேச்சுகள் ஆகியவற்றை போட்டுக் காட்டினோம். அதன் பின் தான் அவனுக்கு நினைவு திரும்பியது" என்று கூறியுள்ளார்.
விஜய் நேரடியாகச் சென்று நாசரின் மூத்த மகனைச் சந்தித்துள்ளார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் உள்ளது. தற்போது, இந்த தகவல் பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.