விஜய்யின் பிகில் படம் ரூ. 300 கோடி வசூலே கிடையாது, எல்லாம் பொய்- பிரபலத்தின் அதிரடி பேட்டி
தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டு பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பிகில்.
விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க நயன்தாரா நாயகியாக நடிக்க படம் செம ஹிட்டடித்தது.
விமர்சன ரீதியாக படம் கொஞ்சம் தடுமாறினாலும் ரசிகர்கள் கொண்டாடினார்கள், படத்தின் வசூலும் ரூ. 300 கோடி எட்டியது என்றனர்.
ஆனால் தற்போது திருச்சியை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், விஜய்யின் பிகில் படம் ரூ. 300 கோடி வசூல் என்பது எல்லாம் வடிகட்டின பொய், தமிழ்நாட்டில் படம் வெறும் ரூ. 130 கோடி வசூலை மட்டுமே ஈட்டியது.
பெரிய நடிகர்களின் படங்கள் குறித்து வரும் வசூல் விவரம் எதுவும் உண்மை இல்லை என்றும் சிலர் மட்டுமே உண்மையான வசூலை வெளியே கூறுகிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.