விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இன்று சினிஉலகம் சார்பில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'வா தலைவா' என்ற நிகழ்ச்சி சென்னை வடபழனியில் இருக்கும் Nexus Vijaya Mallல் நடைபெற இருந்தது.
90 நிமிடம் இடைவிடாமல் விஜய்யின் ஹிட் பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் வர இருந்தது. இதில் DJ பிளாக், சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால், ஸ்ரீநிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருந்தனர்.
ரத்து
இந்த நிகழ்ச்சிக்கு விஜய் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். லியோ படத்தின் நான் வரவா பாடலும் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சி தொடங்கி 2,3 பாடல்கள் சென்ற போது, தளபதி ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிகழ்ச்சி காவல்த்துறையினர் உதவியுடன் சுமூகமாக ரத்து செய்யப்பட்டது
Also Read: கணவர் மீது போலீசில் புகார் கொடுத்த ரச்சிதா! தினேஷ் கொடுத்த பதிலடி