தள்ளிப்போன ஜனநாயகன்.. ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் படம்..
ஜனநாயகன்
தணிக்கை சான்றிதழ் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருந்த இப்படத்தை திரையில் கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால், விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்த படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் வெளிவரவில்லை என்கிற வருத்தம் ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரீ ரிலீஸ்
தாணு தயாரிப்பில் விஜய் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் துப்பாக்கி மற்றும் தெறி. இதில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016ஆம் ஆண்டு வெளிவந்த தெறி படத்தை தற்போது 10 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தாணு அறிவித்துள்ளார்.
இந்த பதிவில், 'விரைவில் திரையில்' என குறிப்பிட்டுள்ளார். தெறி ரீ ரிலீஸ் குறித்து தாணு வெளியிட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
விரைவில் திரையில்
— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #Theri pic.twitter.com/CKCx3M76mR