சென்னையில் முக்கிய இடத்தில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகர் விஜய்- விலை மட்டும் இத்தனை கோடியா?
விஜய்யின் வாரிசு
விஜய் எப்போதும் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர். இந்த வருட ஆரம்பத்தில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.
எனவே ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள், அந்த நேரத்தில் தான் விஜய்யின் அடுத்த பட தகவல்கள் ரசிகர்களை குஷியாக்கியது.
இப்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தான் விஜய் தனது புதிய படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் ஹைதராபாத்தில் தான் நடக்கிறது. அண்மையில் விஜய் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வைரலானது.
புதிய வீடு
விஜய்யின் சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. அங்குதான் குடும்பத்துடன் இருக்கிறார். இதுதவிர அடையாறில் பெரிய அலுவலகம் ஒன்றும் வைத்திருக்கிறார்.
இப்போது அவர் புதியதாக ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளாராம். சென்னையில் இதுவரை இல்லாத விலையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாங்கியுள்ளாராம் விஜய். அதன் விலை மட்டுமே ரூ. 35 கோடியாம், இப்போது அந்த பிளாட்டை தனது அலுவலகமாக அவர் பயன்படுத்துகிறாராம்.
அதே வளாகத்தில் அதே விலையில் நடிகர் ஆர்யாவும் அங்கு ஒரு பிளாட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அருள்நிதியின் டைரி திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
