நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி அபராதம்.. பல கோடி வருமானத்தை மறைத்தாரா?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். ஒரு படத்திற்கு 250 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது.
அவர் வாங்கும் சம்பளத்திற்கான வருமான வரியை அவர் தொடர்ந்து செலுத்தி வருகிறார். 2024ல் இந்திய அளவில் அதிகம் வரி செலுத்திய நடிகர்கள் லிஸ்டில் விஜய் பெயரும் இருக்கிறது.
அபராதம்.. வழக்கு
இந்நிலையில் விஜய் வீட்டில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த வருமான வரி சோதனையில் அவர் புலி படத்திற்காக வாங்கிய 15 கோடி ரூபாய் ரொக்கத்திற்கு வரி செலுத்தவில்லை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும், அதற்கு அபராதமாக 1.5 கோடி ரூபாய் விஜய்க்கு விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அபராதம் 2019ம் ஆண்டே விதிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும், ஆனால் மிகவும் தாமதமாக தற்போது விதிக்கப்ட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
அதை ஏற்று நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வருமான வரி துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.