ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். இது விஜய்யின் கடைசி படமாகும்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் இப்படத்தில் அரசியல் பேசப்போகிறார் என தெளிவாக தெரிந்தாலும், அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை.
விஜய்யின் கதாபாத்திரம்
இந்த நிலையில், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் காவல் துறை அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என தகவல் தெரியவந்துள்ளது.
இது கண்டிப்பாக அவருடைய ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்கும். இதற்கு முன் கடைசியாக தெறி திரைப்படத்தில் போலீஸாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri
