சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.. அதுவும் இவருடன் சேர்த்து
தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடிக்கப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை, தளபதி விஜய் தனது படப்பிடிப்பில் சந்தித்திருந்தார். அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இந்நிலையில், தல தோணி PM என்றும், தளபதி விஜய்யை வைத்து CM என்றும் கூறி, விஜய்யின் ரசிகர்கள் சர்ச்சைகுரிய வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
