விஜய் பதவியேற்பு விழா, முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு! ரஜினி வருகிறாரா?
பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் விஜய் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
மே 10ஆம் தேதி நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிலையில் மேலும் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்க இருக்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவுக்காக பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் சென்று இருக்கிறதாம்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் ஆகியோரும் அழைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, விஜய் பதவியேற்பு விழாவுக்கு வருவதாக அந்த கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

நடிகர்களுக்கு அழைப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையும் விஜய் அழைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. த்ரிஷா, ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய நடிகர்களும் பிரபலங்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
திமுக - அதிமுக கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்துகிறாரா ரஜினி என கடந்த சில தினங்களாக விஜய் ரசிகர்கள் X தளத்தில் மோசமாக விமர்சித்து வரும் நிலையில், அவர் விஜய் பதவியேற்பு விழாவுக்கு நேரில் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.