மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம்.. இரங்கல் தெரிவித்த தவெக கட்சி தலைவர் விஜய்
தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் நேற்று நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போதே, இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர்.
[Z74GYRY ]
இந்த நிலையில், நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இரங்கல் தெரிவித்த விஜய்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது".
"திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்".
"இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்". என பதிவு செய்துள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
