இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகைகளின் கனவுக் கண்ணன் விஜய் தேவரகொண்டா- அவரது முழு சொத்து மதிப்பு
விஜய் தேவரகொண்டா
ஒரே ஒரு படம் அதன்மூலம் முன்னணி நாயகர்களுக்கு இணையாக கொண்டாடப்பட்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
2011ம் ஆண்டு நுவிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமணியம், பெலி சூப்புலு, துவாரகா என பல படங்களில் நடித்தார், ஆனால் அவருக்கு நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி.
இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை அவ்வளவாக பிரபலம் ஆகாத விஜய் தேவரகொண்டா சினிமா பயணம் அர்ஜுன் ரெட்டிக்கு பிறகு டாப்பிற்கு வந்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் பாதி படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
கடைசியாக இவரது நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியாகி இருந்தது.

சொத்து மதிப்பு
விஜய் தேவரகொண்டாவிற்கு ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் ரூ. 15 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு ஒன்று உள்ளது.
ஒரு படத்துக்கு அதிகபட்சமாக ரூ. 12 முதல் ரூ. 15 கோடி சம்பளம் பெறுகிறார். சினிமாவை தாண்டி ரவுடி கிளாத்திங் என்கிற துணி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இப்படி சினிமா, சொந்த தொழில் என சம்பாதிக்கும் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு ரூ. 40 முதல் ரூ. 45 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri
உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri