அது விஜய் தேவரகொண்டா ட்ரெஸ்.. ராஷ்மிகா அணிந்த வந்த உடை வைரல்
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் காதலிப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அவர்கள் அதை ரகசியமாக தான் வைத்திருக்கின்றனர்.
அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு செல்வதை ஆதாரங்களுடன் நெட்டிசன்கள் இதற்கு முன் பலமுறை வெளியிட்டு இருக்கின்றனர். சமீபத்தில் தீபாவளி அன்று விஜய் தேவரகொண்டா வீட்டில் தான் ராஷ்மிகா இருந்தார் என நெட்டிசன்கள் போட்டோவை பார்த்து கூறி வந்தனர்.

ஒரே உடை...
இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் ஒரே உடையில் வந்திருப்பது வைரலாகி இருக்கிறது. இன்று தெலுங்கானாவில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க விஜய் தேவரகொண்டா ஒரு hoodie அணிந்து வந்திருந்தார்.
அதே உடையை தான் இன்று ராஷ்மிகா ஏர்போர்ட்டுக்கு அணிந்து வந்திருந்தார். காதலை உறுதி செய்கிறார்கள் என அந்த இரண்டு போட்டோக்களையும் வைத்து நெட்டிசன்கள் தற்போது பேசி வருகின்றனர்.


இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri