ராஷ்மிகாவை திருமணம் செய்தபின் புது தொழில் தொடங்கும் விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் ராஷ்மிகா பிசியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் இடுப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் தற்போது மற்ற தொழில்களிலும் கவனம் செலுத்துகிறார். அவர் ஏற்கனவே துணி பிஸ்னஸ், ஹோட்டல் பிஸ்னஸ், ஒரு மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டி இருக்கிறார்.

மற்றொரு மல்டிப்ளெக்ஸ்?
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து இன்னொரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் தொடங்கும் முயற்சியில் இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
Medchal அல்லது Malkajgiri என்ற இடத்தில் அந்த தியேட்டரை கட்ட போகிறார் என கூறப்படுகிறது.