பொது மேடையில் விஜய் தேவரகொண்டா செய்த செயல்- பாராட்டும் ரசிகர்கள்
விஜய் தேவரகொண்டா
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அப்படம் மூலமே தமிழ் மக்களிடம் அவர் பிரபலம் என்றாலும் தமிழில் நோட்டா தான் அவரது முதல் திரைப்படம்.
இப்படங்களுக்கு பிறகு அடுத்தடுத்து விஜய் நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் தான். இதனால் அவரை வைத்து பான் இந்தியா படம் எல்லாம் எடுக்க பலர் யோசித்தார்கள். அப்படி சமீபத்தில் அதிக பட்ஜெட்டில் லைகர் என்ற படம் வெளியானது.
ஆனால் படம் படுதோல்வி அடைந்தது, ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியையும் கொடுத்தது.

நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா
குழந்தைகள் மருத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசின் உதவியாலும் பொதுமக்கள் நன்கொடையாலும் நடப்பதை அறிந்தேன்.
மனிதாபிமான அடிப்படையில் பலர் உறுப்புதானம் செய்கிறார்கள். பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. உடல் உறுப்புகளை வீணாக்க கூடாது.
நான் எனது அனைத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளிக்கிறேன்" என்றார். அவரை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த வாரம் பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?