நடிகர் விஜய் தேவரகொண்டாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அசந்து பார்க்கும் ரசிகர்கள்
சினிமாவில் புதிய விஷயங்களை செய்தால் தான் மக்கள் ஒரு கலைஞனை திரும்பி பார்க்கிறார்கள். அதே காதல் கதை, நடனம் என ஒருவர் படம் நடித்தால் அவருக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்று தான் கூற வேண்டும்.
அப்படி தெலுங்கு சினிமாவில் ஒரே மாதிரி படம் நடிக்க கூடாது என்று தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி அதில் வெற்றியும் பெற்றவர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு சினிமாவில் இவர் தொடர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட், எனவே தென்னிந்திய மக்களாலும் அதிகமாக கொண்டாடப்பட்டார்.
இப்போது பாலிவுட் பக்கமும் இவரது கவனம் சென்றுள்ளது, எனவே ஹிந்தியில் விரைவில் ஒரு பெரிய படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது அவர் 6 பேக்ஸ் வைத்து எடுத்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம விஜய் தேவரகொண்டாவா இது ஆளே செமயாக மாறிவிட்டார் என கமெண்ட் செய்கின்றனர்.
