மிரட்டலான போஸ்டர்! தெறிக்க விட்ட விஜய் தேவரகொண்டா! அப்போது இனி அது இல்லையா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அர்ஜூன் ரெட்டி என்ற தன்னுடைய படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகர் விஜய் தேவர கொண்டார்.
தொடர்ந்து காதல் நாயகனாகவே காட்டப்பட்டு வந்தார். முத்தக்காட்சிகள் மீண்டும் படங்களில் மலர விஜய் தேவரகொண்டாவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். அதை ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ரசிகைகளும் அவருக்கு அதிகமே.
தமிழில் நோட்டா அரசியல் புரட்சி படத்தில் அவர் நடித்திருந்தார். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களும் அவர் லவ் ஸ்டோரியாகவே அமைந்தன. இதனால் பெரிய வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.
இதிலிருந்து மாற்று முடிவெடுத்த அவர் தற்போது ஆக்ஷன் கதைகளில் களமிறங்கியுள்ளார். Liger என்ற அடுத்த படம் தயாராகிவருகிறது. இதன் போஸ்டர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறதாம். விஜய்யின் தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆக்ஷன் கதை என்பதால் அவரின் படத்திற்கு உரிய அழகான காதல், ரொமான்ஸ் காட்சிகள் இனி இருக்காதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
The Date is set.
— Vijay Deverakonda (@TheDeverakonda) February 11, 2021
India - we are coming!
September 9, 2021. #LIGER#SaalaCrossbreed#PuriJagannadh @ananyapandayy @karanjohar @charmmeofficial @apoorvamehta18 @DharmaMovies @PuriConnects pic.twitter.com/pgclqQYiQ4