சமந்தாவுக்கு இரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்! வீடியோவுடன் இதோ
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு சினிமா துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
காஷ்மீரில் ஷூட்டிங்
சமந்தா தற்போது காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருக்கிறார். விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தான் அங்கு நடந்து வருகிறது.
சமந்தாவின் பிறந்தநாளுக்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என விஜய் தேவரக்கொண்டா, இயக்குனர் மற்றும் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
நள்ளிரவில், குளிரில் சர்ப்ரைஸ்
காஷ்மீரில் நள்ளிரவு குளிரில் ஒரு காட்சியை எடுக்கப்போவதாக பொய்யாக கூறி இருக்கின்றனர். சமந்தாவும் நம்பி வந்து நடித்து இருக்கிறார். அப்போது தான் அவர்கள் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர்.
அந்த வீடியோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.