டாக்சிக் உறவிலிருந்து வெளியேற அவர்தான் உதவினார்.. திருமணத்திற்கு முன் ராஷ்மிகா கூறிய விஷயம்

By Kathick Feb 23, 2026 10:00 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

பான் இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்தன.

டாக்சிக் உறவிலிருந்து வெளியேற அவர்தான் உதவினார்.. திருமணத்திற்கு முன் ராஷ்மிகா கூறிய விஷயம் | Vijay Deverakonda Helped Rashmika Mandanna

அடுத்ததாக இவர் நடிப்பில் மைஸா மற்றும் Cocktail 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வருகிற 26ஆம் தேதி உதய்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

டாக்சிக் உறவிலிருந்து வெளியேற அவர்தான் உதவினார்.. திருமணத்திற்கு முன் ராஷ்மிகா கூறிய விஷயம் | Vijay Deverakonda Helped Rashmika Mandanna

இந்த திருமணத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தை பணியமர்த்தி இருக்கிறார்களாம். இதுவரை தங்கள் திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக ராஷ்மிகா அறிவிக்காமல் இருந்த நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'Wedding of VIROSH' என பதிவு செய்திருந்தார்.

டாக்சிக் உறவிலிருந்து வெளியேற அவர்தான் உதவினார்.. திருமணத்திற்கு முன் ராஷ்மிகா கூறிய விஷயம் | Vijay Deverakonda Helped Rashmika Mandanna

ராஷ்மிகா கூறிய விஷயம்

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாக்சிக் உறவிலிருந்து வெளியேற அவர்தான் உதவினார்.. திருமணத்திற்கு முன் ராஷ்மிகா கூறிய விஷயம் | Vijay Deverakonda Helped Rashmika Mandanna

இதில், "என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு கடினமான கட்டத்தை எதிர்கொண்டேன். உணர்ச்சி ரீதியாக மிகவும் சோர்வாக இருந்தேன். அந்த நேரத்தில் விஜய் தேவரகொண்டாதான் எனக்கு உறுதுணையாக இருந்து, மோசமான டாக்சிக்கான உறவிலிருந்து வெளியேற உதவினார். அது எனக்கு புதிய நம்பிக்கையையும் முன்னேறும் தைரியத்தையும் அளித்தது" என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US