திருமணம் பற்றி விஜய் தேவரகொண்டா சொன்ன விஷயம், வெடித்த சர்ச்சை... நடிகர் பதிலடி
விஜய் தேவரகொண்டா
நட்சத்திர ஜோடியாக மாறியுள்ள விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் பாலிவுட் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான காபி வித் கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டபோது அவரை 100 முறை கேட்க வேண்டும் என கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையாக பேசப்பட்டது.
விஜய் தேவரகொண்டாவின் கருத்தில் ஆணாதிக்க மனநிலை வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டி பலர் அவரை விமர்சித்தனர்.

நடிகர் பதிவு
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவுடன் எடுத்த ஒரு அழகான புகைப்படத்தையும் தனது மனைவியை தூக்கிக்கொண்டு வலம்வரும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் அவர், எனது சிறந்த தோழி, என் மனைவி, என்னவள் என எனது வாழ்க்கையில் நான் செய்த மிக அழகான விஷயங்களில் ஒன்று எங்கள் உறவு. நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
நானும் அவளும் உலகத்தை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தாலும் அதற்குத் தயாராக இருக்கிறோம் என ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu