லைகர் சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய் தேவரகொண்டா! அடுத்த படத்திற்கு எதுவுமே இல்லையா?

By Parthiban.A Sep 04, 2022 08:10 AM GMT
Report

லைகர் தோல்வியை தொடர்ந்து ஹீரோ சம்பளத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்.

லைகர்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஹிந்தி debut என விளம்பரப்படுத்தப்பட்ட லைகர் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலிக்கவில்லை.

படம் படுதோல்வி அடைந்த நிலையில் அதற்க்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. படத்தை புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது பற்றி எனக்கு கவலையில்லை என அவர் கூறி இருந்தார்.

லைகர் சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய் தேவரகொண்டா! அடுத்த படத்திற்கு எதுவுமே இல்லையா? | Vijay Deverakonda Returns Liger Salary 6 Cr

சம்பளத்தை திருப்பி கொடுத்தார்

லைகர் படுதோல்வியில் முடிந்திருக்கும் நிலையில் தனது சம்பளத்தில் இருந்து 6 கோடி ரூபாயை விஜய் தேவரகொண்டா திருப்பி கொடுத்து இருக்கிறார். அவர் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே இயக்குனர் உடன் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கும் ஜன கன மன படமும் சிக்கலில் மாட்டி இருக்கிறது. அந்த படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் விஜய் தேவரைக்கொண்டா அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கிறாராம். படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் அதில் ஷேர் பெற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

லைகர் சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய் தேவரகொண்டா! அடுத்த படத்திற்கு எதுவுமே இல்லையா? | Vijay Deverakonda Returns Liger Salary 6 Cr

அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போல் நடனம் ஆடிய ஸ்ருதி ஹாசன்.. வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US