ரெட்ரோ பட ப்ரீ - ரிலீஸில் சர்ச்சை பேச்சு.. நடிகர் விஜய் தேவரகொண்டா கொடுத்த விளக்கம்
விஜய் தேவரகொண்டா
நுவிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பின், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமணியம், பெலி சூப்புலு, துவாரகா என பல படங்களில் நடித்தார், ஆனால் அவருக்கு நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி.
இந்த ஒரு படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகராக டாப்பிற்கு வந்து விட்டார். கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டுள்ளார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் விஜய் இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விளக்கம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விஜய் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், " ரெட்ரோ நிகழ்வில் நான் தெரிவித்த ஒரு கருத்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதற்கு நான் எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எந்த ஒரு உள்நோக்கமும், யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலும் எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் நான் பேசவில்லை" என்று பதிவு செய்துள்ளார்.
To my dear brothers ❤️ pic.twitter.com/QBGQGOjJBL
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 3, 2025