நடிகர் விஜய்யை பாராட்டி பேசும் விக்ரம் தனுஷ்..இணையத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோ இதோ!
தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய்.
முதன் முதலில் 1984-ம் ஆண்டு வெற்றி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் தன் கரியரை தொடங்கி பின்பு ஹீரோவாக அவதாரம் எடுத்து பின்னாளில் உச்ச நடிகராக உயர்ந்து தொடர்ந்து தனிக்கென தனி இடத்தை தக்க வைத்திருப்பவர் தான் தளபதி விஜய்.
தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா,ஆந்திர, தெலங்கானாவிலும் லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.
திரைத்துறையிலும் பல நடிகர்கள் இவரின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். அந்தளவிற்கு தன் அசாத்திய நடிப்பு மற்றும் நடன அசைவுகளால் அனைவரையும் கட்டிப்போடும் திறன் கொண்டவர்.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் குறித்து தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான விக்ரம் மற்றும் தனுஷ் பாராட்டி பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் அதிக பேரால் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த விடியோவை நீங்களே பாருங்கள்!
#Beast @actorvijay ? pic.twitter.com/9PPVQfAycT
— Deepa Vijay ツ (@Deepa_0ff) November 18, 2021