விஜய்க்கு கார் கிப்ட் கொடுக்க சென்ற தயாரிப்பாளர்.. வாங்க மறுத்த தளபதி! இப்படி ஒரு காரணம் சொன்னாரா
லியோ படம் உலக அளவில் 148.5 கோடி ரூபாய் முதல் நாளில் வசூலித்த சாதனை படைத்தது. முதல் நாளில் அதிகாலை காட்சிகள் போட அரசு அனுமதி அளிக்காததால் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் வழக்கம் போல் போடபட்டதால் தமிழ்நாட்டில் இருந்தும் அதிகம் பேர் வெளியில் சென்று படம் பார்த்து இருக்கிறார்கள் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறி இருக்கிறார்.

கிஃப்ட் கொடுக்க சென்ற லலித்..
லியோ படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் தளபதி விஜய் பற்றி ஒரு விஷயத்தை தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். மாஸ்டர் படத்தின் ஹிட்டுக்கு பிறகு ஒரு கார் கிஃப்ட் கொடுக்க சென்று இருக்கிறார் தயாரிப்பாளர் லலித்.
ஆனால் அதை விஜய் வாங்க மறுத்துவிட்டாராம். ' சம்பளம் தரீங்க.. அது போதும்' என விஜய் கூறிவிட்டாராம்.

You May Like This Video
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri