தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தெலுங்கின் மெகா ஹிட் கூட்டணி ! வெளியான மாஸ் தகவல்
மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது, அதனை தொடர்ந்து இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி கூட்டணி அப்படத்திற்காக இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆம், தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான வம்சி, விஜய்யை சந்தித்து கதை கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்துப் போயிருக்கிறது.
 
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு மூலம் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. மேலும் தில் ராஜுதான் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் தயாராக உள்ள இப்படத்தின் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    