ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள விஜய் பட இயக்குனர்.. வெறித்தனமான அப்டேட்

rajinikanth nelson dhilpkumar
By Kathick Dec 23, 2021 03:50 PM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியானது. இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்தது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. அதுமட்மின்றி, மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் திரை வட்டாரங்களில் கூறப்பட்டது.

இதன்பின் சிலர் பால்கி தான் ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் என்று கூறினர். இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தான் ரஜினி 169 படத்தின் இயக்குனர் என்று லேட்டஸ்ட் Buzz கூறுகிறது.

இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று தெரிவிக்கின்றனர். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது தலபாதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி குறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US