மகனால் விஜய்க்கு கிடைத்த ஏமாற்றம் - வருத்தத்தை பகிர்ந்த விஜய்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் "வாரிசு". இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
விஜய்க்கு கிடைத்த ஏமாற்றம்
இந்நிலையில், விஜயுடன் "வாரிசு" படத்தில் இணைந்து நடித்து நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன், விஜய்யை பற்றி சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். "வாரிசு" படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் எதுவும் பேசவில்லை.

அவர் அடுத்த நாள் முதல் சாதாரணமாக பேச தொடங்கினார். அவ்வாறு பேச தொடங்கிய அவர் தனது மகன் சஞ்சய் பற்றியும் பேசினார். அவர் சஞ்சயை நடிகனாக தான் பார்க்க ஆசைபட்டார். ஆனால் சஞ்சய் டைரக்ஷன் மீது தான் ஆர்வமாக இருக்கிறான் என வருத்தத்துடன் தெரிவித்ததாக நடிகை அர்ச்சனா கூறியுள்ளார்.
என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது தான்.. திருநங்கை பிரியா ஷாக்கிங் பேட்டி
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu