படத்திலிருந்து பாதியில் வெளியேறிய நடிகர் விஜய்.. அவருக்கு பதில் நடிக்க வந்த பிரபல நடிகர்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்.
இவரை சுற்றி பல கோடிக்கணக்கில் வர்த்தகம் தற்போது உருவாகியுள்ளது. அதே அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படம் வருகிற 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு, பூவே உனக்காக படத்தின் மூலம், முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று தான், உன்னை நினைத்து. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்திருந்தது விஜய் தான். முதலில் லைலாவுடன் இணைந்து விஜய் சில காட்சிகள் நடித்து விட்டாராம்.
ஆனால், தீடீரென சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இதன்பின், சூர்யாவை நடிக்க வைக்க இயக்குனர் விக்ரமன் முடிவு செய்தாராம்.


டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri